Enable Javscript for better performance
பிப்.13-ல் சங்ககிரி மின் கோட்ட பகுதிகளில் மின் இணைப்பு பெயர் மாற்ற முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பிப்.13-ல் சங்ககிரி மின் கோட்ட பகுதிகளில் மின் இணைப்பு பெயர் மாற்ற முகாம்

    By DIN  |   Published on : 09th February 2018 02:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சங்ககிரி மின் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் மின் இணைப்பு பெயர் மாற்றம் சிறப்பு முகாம் சங்ககிரி வி.என். பாளையம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் வரும் 13, 14-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
    இதுகுறித்து சங்ககிரி செயற்பொறியாளர் கே. பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளதாவது:
    மேட்டூர் மின் பகிர்மான வட்டம், சங்ககிரி கோட்டத்துக்குள்பட்ட பள்ளிபாளையம், கொக்கராயன்பேட்டை, எஸ்.பி.பி. காலனி, குமாரபாளையம், வெப்படை, ஐ.சி.எல். காலனி, சங்ககிரி பல்லக்காபாளையம், வைகுந்தம் ஆகிய பகுதிகளில் மின் இணைப்புகள் பழைய பெயரிலேயே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த மின் இணைப்புகளுக்கு உடனடியாக பெயர் மாற்றம் செய்து கொடுப்பதற்கான சிறப்பு முகாம் சங்ககிரி வி.என். பாளையத்தில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் வரும் 13, 14-ம் தேதிகளில் காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற உள்ளது.
    பெயர் மாற்றம் கோருவோர் முகாமில் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட பெயர் மாற்ற விண்ணப்பம் மற்றும் வருவாய்த்துறை ஆவணங்களை உடன் இணைத்து பெயர் மாற்ற கட்டணம் ரூ. 200 செலுத்தி உடனடியாக மின் இணைப்புகளை பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். பெயர் மாற்ற படிவங்கள் அந்தந்த பிரிவு அலுவலகங்களிலும் மற்றும் சங்ககிரி செயற்பொறியாளர் வருவாய் பிரிவிலும் இலவசமாகக் கிடைக்கும். மின் துண்டிப்பு செய்யப்பட்டுள்ள மின் இணைப்புகள், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்து தரப்பட மாட்டாது என அதில் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai