தனியார் நிதி நிறுவனத்தில் திருட்டு முயற்சி
By ஆத்தூர், | Published on : 14th July 2018 10:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வியாழக்கிழமை இரவு பூட்டை உடைத்து திருட்டு முயற்சி நடந்துள்ளது.
பெத்தநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு வியாழக்கிழமை இரவு 2.30 மணியளவில் பூட்டை உடைத்து திருட்டு முயற்சி நடந்துள்ளது. அப்போது எதிர்பாராது விதமாக அந்த வழியாக ஏத்தாப்பூர் காவலர்கள் ரோந்துப் பணியில் வருவதைப் பார்த்த திருடர்கள் அங்கிருந்து தப்பினார்கள்.இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்டு கிளை மேலாளர் மற்றும் அலுவலர்கள் வந்து பார்த்து திருடு போகவில்லை எனவும், முயற்சி நடந்துள்ளது என்றும் தெரிவித்தனர். பேருந்து நிறுத்தத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.