சுடச்சுட

  

  கெங்கவல்லி ஜமாபந்தியில் நலத்திட்ட உதவிகள் விநியோகம்

  By  தம்மம்பட்டி  |   Published on : 13th June 2018 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கெங்கவல்லியில் மூன்றாம் நாளாக நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில், சேலம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
   கெங்கவல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு, சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தலைமை வகித்தார். அதில், கெங்கவல்லி வடக்கு, தெற்கு, தெடாவூர் வடக்கு, தெற்கு, நடுவலர் தெற்கு, வடக்கு ஆகிய ஊர்களிலிருந்து பொதுமக்கள் குடும்ப அட்டை, உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித்தொகைகள், சாதிச் சான்று, வாரிசுச் சான்று போன்றவைகளை கேட்டு 460 மனுக்களை அளித்தனர். பெறப்பட்ட மனுக்கள் உரிய அலுவலருக்கு அனுப்பப்பட்டு, உடனடியாக தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது.
   இதில், 7 பயனாளிகளுக்கு உதவித்தொகை ஆணைகளை ஆட்சியர் வழங்கினார். நிகழ்ச்சியில் கெங்கவல்லி வட்டாட்சியர் வரதராஜன், துணை வட்டாட்சியர் நல்லுசாமி பங்கேற்றனர்.
   எடப்பாடியில்... எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியின் நிறைவு நாளில் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 34 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
   எடப்பாடி வருவாய் வட்டத்துக்குள்பட்ட பூலாம்பட்டி, எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் பிர்காகளுக்கு தனித்தனியே ஜமாபந்தி நடைபெற்றது. இதில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 483 மனுக்கள் பெறப்பட்டன.
   நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த சங்ககிரி கோட்டாட்சியர் ராமதுரைமுருகன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். வட்டாட்சியர்கள் கேசவன், செல்வகுமார், தனி வட்டாட்சியர் ஜெயவேல் துணை வட்டாட்சியர்கள் மாணிக்கம்,கோமதி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai