சுடச்சுட

  

  செட்டாப் பாக்ஸ் விநியோகம் செய்யாத கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் பதிவு ரத்து

  By  சேலம்  |   Published on : 13th June 2018 08:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரசு விலையில்லா டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் பெற்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்யாத அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பதிவு ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
   சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சுமார் 3.12 லட்சம் விலையில்லா டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ்கள் விநியோகிக்கப்பட்டு, டிஜிட்டல் முறையிலான கேபிள் டிவி தங்குதடையின்றி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
   இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவின்படி, அனலாக் முறையில் கேபிள் டிவி சிக்னல் ஒளிபரப்பு செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் விலையில்லா டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் வழங்கக் கோரி, ஆதார் அட்டை கொடுத்தும் அவர்களுக்கு விலையில்லா செட்டாப் பாக்ஸ் வழங்காமல் அனலாக் முறையில் கேபிள் டிவி சிக்னல் ஒளிபரப்பு செய்து வரும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீது உரிய சட்டப் பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
   பொதுமக்களிடம் கேபிள் டிவிக்கான கட்டணத்தை வசூல் செய்துவிட்டு அரசுக்கு செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீதும் உரிய சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு விலையில்லா டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் பெற்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்யாத அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் விலையில்லா டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் பெற்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய தவறும் பட்சத்தில், அவர்களது பதிவு ரத்து செய்யப்பட்டு, புதிய கேபிள் ஆபரேட்டர்கள் பதிவு செய்யப்படுவார்கள். மேலும், டிஜிட்டல் செட் டாப் பாக்ஸ் விநியோகம் செய்வதில் சுணக்கம் காட்டும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் மீது பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.
   தனியார் கேபிள் டிவி டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ்களை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் என பொதுமக்களை ஏமாற்றும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீதும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.
   
   
   
   
   
   
   
   
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai