சுடச்சுட

  

  மணல் கடத்த முயன்ற 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்

  By  தம்மம்பட்டி  |   Published on : 13th June 2018 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கெங்கவல்லியில் ஆற்றுமணலை கடத்த முயன்ற மூன்று மாட்டு வண்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
   கெங்கவல்லியில் சுவேத நதியில் ஆற்றுமணல் கடத்தப்படுவதாக திங்கள்கிழமை இரவு கெங்கவல்லி காவல் ஆய்வாளர் சண்முகத்துக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, கெங்கவல்லி சிவன் கோயில் அருகே உள்ள சுவேத நதியில் ஆற்றுமணலை மாட்டு வண்டிகளில் சிலர் கடத்த முயன்றது தெரியவந்தது.
   அதையடுத்து, மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்யப்பட்டதுடன், சங்கர் (20), பெரியசாமி (60), சங்கர் (40 ) ஆகிய மூவருக்கு அபராதம் விதிக்க ஆத்தூர் கோட்டாட்சியருக்கு கெங்கவல்லி காவல் ஆய்வாளர் சண்முகம் பரிந்துரை செய்தார். அதையடுத்து, ஆத்தூர் கோட்டாட்சியர் செல்வன், மூன்று மாட்டு வண்டிகளுக்கும் தலா ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai