சுடச்சுட

  

  மேட்டூரில் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர்கள் தர்னா

  By  மேட்டூர்,  |   Published on : 13th June 2018 08:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மேட்டூரில் தமிழ்நாடு ஓய்வுபெற்றோர் நலச் சங்கத்தினர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் எதிரே செவ்வாய்க்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
   இதில், மின்வாரிய வைரவிழா பரிசுத் தொகையான 3 சதவீதத்தை உடனடியாக வழங்க வேண்டும். 2003 ஏப்ரல் மாதத்துக்கு பின் ஓய்வுபெற்றவர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை உடனே வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை மின்வாரிய ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும். சொசைட்டி ஒப்பந்த பணிக் காலத்தை சேர்த்து ஓய்வூதியம் கணக்கிடப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
   தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மேட்டூர் கிளை தலைவர் எஸ்.ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். செயலர் பி.சி.சேப்பெருமாள், பொருளாளர் பி.பி.பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க நிர்வாகிகள் ஜி.பி.நந்தகுமார், ஆர்.சுந்தரராஜன் ஆகியோர் விளக்கிப் பேசினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai