சுடச்சுட

    

    ஆட்டையாம்பட்டி அருகே தறித் தொழிலாளி அடித்துக் கொலை

    By  சேலம்,  |   Published on : 14th June 2018 09:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பகுதியில் தறித் தொழிலாளியை அடித்துக் கொலை செய்த நான்கு பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
     ஆட்டையாம்பட்டி முத்தனம்பாளையத்தைச் சேர்ந்தவர் கோ.சக்திவேல் (43). தறித் தொழிலாளி. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த க.சரவணன் (40) என்பவரும் நண்பர்கள் ஆவர். இதனிடையே சரவணனின் மனைவியும், சக்திவேலும் நெருங்கிப் பழகி வந்தனர் என தெரிகிறது. இதுதொடர்பான தகராறில் சரவணனின் மனைவி அவரைப் பிரிந்து சென்றதாகத் தெரிகிறது.
     இதில் ஆத்திரமடைந்த சரவணன் மற்றும் அவரது சகோதரர்கள் மணிகண்டன், கனகராஜ், சேட்டு ஆகியோர் புதன்கிழமை காலை சக்திவேலுவை காரில் சரவணின் வீட்டுக்கு அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து சரவணன் உள்ளிட்டோர் சக்திவேலின் உடலை காரில் ஏற்றிச் சென்று அவரது வீட்டில் இறக்கி வைத்து விட்டு தப்பிச் சென்றுவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
     இதுதொடர்பாக ஆட்டையாம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவான நான்கு பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai