சுடச்சுட

  

  சங்ககிரியில் ஜமாபந்தி நிறைவு: 51 மனுக்களுக்கு தீர்வு

  By  சங்ககிரி,  |   Published on : 14th June 2018 09:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சங்ககிரி வட்டத்தில் புதன்கிழமை 15 கிராமங்களுக்கான ஜமாபந்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
   இதில் முதியோர் ஓய்வூதியம், குடும்ப அட்டை வழங்கக்கோரி 263 மனுக்களை அளித்தனர். 4 நாள்கள் நடைபெற்ற ஜமாபந்தியில் பெறப்பட்டதில் 51 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு அதற்கான சான்றிதழ்களை எம்.எல்.ஏ. ஏ.ராஜா வழங்கினார்.
   கெடிகாவல், வைகுந்தம், அக்ரஹார தாழையூர், காளிகவுண்டம்பாளையம், கன்னந்தேரி, அ.புதூர், ஏகாபுரம், இடங்கணசாலை பிட் 1, பிட் 2, தப்பகுட்டை, நடுவனேரி, எர்ணாபுரம், கனககிரி, கூடலூர், கண்டர்குலமாணிக்கம் உள்ளிட்ட கிராமங்களின் கணக்குகளை ஜமாபந்தி அலுவலரும், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளருமான (பொது) சி.விஜய்பாபு தணிக்கை செய்தார். பின்னர் அவரிடம் பட்டா மாறுதல் கோரி 109, சர்வே எண் உட்பிரிவு கோரி 12, வீட்டுமனைப் பட்டா கோரி 17, நில அளவை செய்யக் கோரி 5, வாரிசு சான்றிதழ் கோரி 2, ஆதரவற்றோர் உதவித்தொகை கோரி 1, முதியோர் ஓய்வூதியத்தொகை கோரி 101, அடிப்படை வசதிகள், குடும்ப அட்டை கோரி 5, பிறப்புச் சான்று கோரி 2 மற்றும் பல்வேறு கோரிக்கைகள் குறித்து 9 மனுக்கள் உள்பட மொத்தம் 263 பேர் மனுக்கள் அளித்தனர்.
   இந்நிகழ்ச்சியில் சங்ககிரி எம்எல்ஏ ஏ.ராஜா கலந்து கொண்டு ஜமாபந்தியில் பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுக்களில் பட்டாமாறுதல் உத்தரவு 41 பேருக்கும், இலவச வீட்டுமனைப் பட்டா ஒருவருக்கும், சர்வே எண் உட்பிரிவு 2 பேருக்கு, முதியோர் ஒய்வூதியத்துக்கான உத்தரவு 5 பேருக்கு, வாரிசு சான்று 3 பேருக்கு என மொத்தம் 51 நபர்களுக்கு வழங்கிப் பேசியது:
   தற்போது வறட்சி காலமாக உள்ளதால் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். திறந்த வெளியை இயற்கை உபாதைகளுக்காகப் பயன்படுத்துவதால் நோய்கள் ஏற்படுகின்றன. அதனைத் தவிர்க்கும் பொருட்டு சங்ககிரி வட்டப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அரசு வழங்கும் மானியத்தை பயன்படுத்தி வீடுகளில் தனிநபர் இல்ல கழிப்பறைகளை கட்ட வேண்டும் என்றார்.
   வட்டாட்சியர் கே.அருள்குமார், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் என்எம்எஸ்.மணி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிடிஏ தலைவர் ஆர்.செல்லப்பன், ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஜெயசீலன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஜெயக்குமார், மண்டல துணை வட்டாட்சியர் சிவராஜ், தேர்தல் துணை வட்டாட்சியர் ரமேஷ், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வீராச்சிபாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராஜா உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
   கெங்கவல்லியில்...
   கெங்கவல்லியில் நடைபெற்ற ஜமாபந்தியில் 89 பயனாளிகளுக்கு ரூ.7.36 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் புதன்கிழமை வழங்கினார்.
   கெங்கவல்லியில் வீரகனூர் உள்வட்டம், வீரகனூர் வடக்கு, சொக்கனூர் அக்ரஹாரம், வீரகனூர் வடக்கு, திட்டச்சேரி, லத்துவாடி ஆகிய கிராமங்களுக்கு நடைபெற்ற ஜமாபந்தியில் முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, பட்டா மாறுதல் மற்றும் பல்வேறு உதவித்தொகைகள் கோரி 299 மனுக்கள் பெறப்பட்டன.
   முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 89 பயனாளிகளுக்கு ரூ. 7.36 லட்சத்துக்கான திருமண உதவித்தொகைக்கான ஆணை, 3 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணை மற்றும் இருவருக்கு வேளாண்மைத் துறை சார்பில் ரூ.74,839 மானியத்தில் நுண்ணீர்ப் பாசனக் கருவிகளும் வழங்கப்பட்டன.
   தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் , வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைத்து பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.
   ஜமாபந்தி நிகழ்ச்சியில் கெங்கவல்லி வட்டாட்சியர் வரதராஜன், துணை வட்டாட்சியர் நல்லுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai