Enable Javscript for better performance
காவிரி விவகாரத்தை கமல்ஹாசன் முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி விவகாரத்தை கமல்ஹாசன் முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும்

    By DIN  |   Published on : 16th June 2018 11:56 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி விவகாரம் குறித்து நடிகர் கமல்ஹாசன் முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.
    இதுதொடர்பாக அவர் சேலத்தில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:
    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 27 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்வதில் மத்திய அரசு கபட நாடகம் ஆடுகிறது.
    சோனியா காந்தி,  ராகுல் காந்தி ஆகியோர் குற்றவாளிகளை மன்னிப்பதாகக் கூறிய பிறகும், அவர்களை விடுவிக்காமல் மத்திய அரசு வஞ்சித்து வருகிறது.
    சேலம் முதல் சென்னை வரையிலான பசுமை வழிச் சாலையால் பொதுமக்களுக்கு எந்தவிதப் பயனும் இல்லை.
     அதேவேளையில், எந்தவிதக் கருத்துக் கேட்பும் இல்லாமல் திட்டத்தை நிறைவேற்றும் முயற்சியில் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது.
     இதுதொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்க, பாதிக்கப்படும் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தால், அவர்கள் மீதும் காவல் துறை அடக்குமுறை நடவடிக்கையைக் கையாள்கிறது.
    மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கும் திட்டங்களை பொதுமக்கள் அப்படியே ஏற்க வேண்டும் என்ற சர்வாதிகாரப் போக்குக் கடைப்பிடிக்கப்படுகிறது.
    கர்நாடக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து,  உபரிநீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில்,  நடப்பு மாதத்துக்கான தண்ணீரை திறந்துவிடுவதாக கர்நாடக அரசு கூறுவது நகைச்சுவையானது.
     காவிரி விவகாரத்தில் தமிழக அரசு தனது நடவடிக்கைகளைக் கைவிட்டுவிட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது.  
    கர்நாடக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதற்கு அந்த மாநில முதல்வருக்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
    காவிரி விவகாரம் குறித்து கமல்ஹாசன் முதலில் முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார் இரா.முத்தரசன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai