Enable Javscript for better performance
ஆத்தூர் நகராட்சி அலுவலகம் முன் ஒருவர் தீக்குளிக்க முயற்சி- Dinamani

சுடச்சுட

    

    ஆத்தூர் நகராட்சி அலுவலகம் முன் ஒருவர் தீக்குளிக்க முயற்சி

    By DIN  |   Published on : 24th March 2018 05:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆத்தூர் நகராட்சி அலுவலகம் முன் தீக்குளிக்க முயற்சித்தவரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
    ஆத்தூரைச் சேர்ந்தவர் பழக்கடை முருகன் (42). இவர், நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் கடையை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். கடைக்கான வாடகையை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து நகராட்சி அலுவலர்கள் பலமுறை தகவல் அளித்தும் வாடகையை செலுத்தவில்லையாம்.
    இந்தநிலையில் வெள்ளிக்கிழமை கடைக்கு சீல் வைக்கச் சென்ற நகராட்சி அலுவலர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதனையடுத்து நகராட்சி அலுவலக வளாகத்துக்கு மண்ணெண்ணையுடன் வந்த முருகன் தீக்குளிக்க முயன்றுள்ளார்.இது குறித்து தகவல்அறிந்து வந்த போலீஸார், முருகனை தடுத்து நிறுத்தி, காவல் நிலையத்துக்கு விசாரிப்பதற்காக அழைத்துச் சென்றனர்.
    இதையடுத்து நகராட்சி ஆணையர் க.கண்ணன், காவல் நிலையத்தில் வாடகை கேட்கச் சென்றவர்களை வேலையை செய்யவிடாமல் தடுப்பதாகவும், வாடகை செலுத்தத் தவறுகிறார் என்றும் முருகன் மீது புகார் கொடுத்துள்ளார்.இது குறித்து ஆத்தூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai