Enable Javscript for better performance
ஓமலூர் அருகே தொடர் விபத்தால் வாகனங்கள் சேதம்- Dinamani

சுடச்சுட

    

    ஓமலூர் அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த தொடர் விபத்தில், இரண்டு வாகனங்கள் மற்றும் கடை சேதமடைந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
    சேலத்தில் இருந்து ஓமலூர் நோக்கி வந்த கார், தண்ணீர் தொட்டி பகுதியில் சாலையோரத்தில் நின்றிருந்த மினி டெம்போ மீது மோதியது. இதையடுத்தும் நிற்காத கார், மினி டெம்போவை வேகமாக தூக்கி வீசியதில் கடையின் முன்பாக நின்றிருந்த கார் சேதமடைந்தது. மேலும், அருகில் இருந்த டீக்கடையும் சேதமடைந்தது. வேகமாக கார் வருவதை அறிந்த பொதுமக்கள் அங்கிருந்து ஓடி விட்டதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
    விபத்தை ஏற்படுத்திய கார் விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகி வசந்த் என்பவருக்குச் சொந்தமானது.குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த இவர், அண்மையில் தான் வெளியே வந்தார்.விபத்தை ஏற்படுத்திய காரை முற்றுகையிட்ட அப்பகுதி பொதுமக்கள், வசந்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்தது சூரமங்கலம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினர். இந்த விபத்து குறித்து சேலம் சூரமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai