Enable Javscript for better performance
ஓமலூர் பகுதியில் சூறாவளி காற்று: வீடுகள், மின்கம்பங்கள் சேதம்- Dinamani

சுடச்சுட

    

    ஓமலூர் பகுதியில் சூறாவளி காற்று: வீடுகள், மின்கம்பங்கள் சேதம்

    By DIN  |   Published on : 24th March 2018 05:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஓமலூர் வட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த மழை மற்றும் சூறைக் காற்றினால் 30- க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
    ஓமலூர் வட்டாரப் பகுதியில் பலத்த சூறைக் காற்றுடன் மழை பெய்தது. இதில் பல வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்து சேதமடைந்தன. ஓமலூர் அருகே உள்ள கோட்டமேட்டுப்பட்டி கிராமத்தில் சூறைக் காற்றுக்கு வீடுகளின் ஓடுகள், அட்டைகள் பறந்தன. காற்றின் சுழலில் சிக்கி சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு வீடுகளின் அட்டைகள் தூக்கி வீசப்பட்டன. இதேபோன்று செங்கல் சூளைகள், கூரை வீடுகளும் சேதமடைந்துள்ளன. காற்றின் காரணமாக ஆங்காங்கே மரங்களும் முறிந்து விழுந்தன. பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்தன. இதன் காரணமாக கோட்டமேட்டுப்பட்டி, செக்காரப்பட்டி, குள்ளம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பின்னர் சீர் செய்யப்பட்டது. காற்றில் சேதமடைந்த வீடுகளை வருவாய்த்துறை அதிகாரிகள் பார்வையிட்டு கணக்கெடுத்து வருகின்றனர். சூறைக் காற்றின் காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு தமிழக அரசு நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai