Enable Javscript for better performance
தொழிலாளி கொலை வழக்கில் இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    இளம்பிள்ளையில் தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
    இளம்பிள்ளை அம்மன் கோயில் காடு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜு (45) . இவர் வியாழக்கிழமை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். இந்தச் சம்பவம் குறித்து மகுடஞ்சாவடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் இளம்பிள்ளை அருகே உள்ள மெய்யனூர் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த சந்திரப்பன் மகன் ஜெயவேலுவை (23) பிடித்து போலீஸார் விசாரணை செய்தனர். இதில், இளம்பிள்ளை ஏழுமாத்தானூர் டாஸ்மாக் கடையில் மது அருந்திய போது ராஜுவுக்கும், ஜெயவேலுவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஜெயவேல் மற்றும் அவரது குடும்பத்தினரை அவதூறாகப் பேசியதால் மன உளைச்சல் அடைந்து இளம்பிள்ளை ஏரிக்கரை ஓரம் உள்ளமுனியப்பன் கோயில் வளாகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்த ராஜுவை ஜெயவேலு கழுத்தை அறுத்துக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஜெயவேலுவை போலீஸார் கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai