Enable Javscript for better performance
நகை திருடியவருக்கு ஓராண்டு சிறை- Dinamani

சுடச்சுட

    

    எடப்பாடி வட்டம், கொங்கணாபுரம் அருகே உள்ள எருமைப்பட்டி கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடியவருக்கு சங்ககிரி 2-ஆவது குற்றவில் நடுவர் நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
    எடப்பாடி வட்டம், கொங்கணாபுரம் அருகே உள்ள எருமைப்பட்டி, பெரிய மாரியம்மன் கோயில் அருகில் வசித்து வருபவர் விவசாயி ரமேஷ். கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதி அவரது வீட்டின் பூட்டை உடைத்து ஒன்பதரை பவுன் நகைகளைத் திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து எடப்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து மதுரை கிழக்குத் தெரு பகுதியைச் சேர்ந்த வெள்ளியங்கிரி மகன் பாண்டியராஜ் (27) என்பவரைக் கைது செய்து அவரிடமிருந்து ஒன்பதரை பவுன் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து அவர் மீது சங்ககிரி 2-ஆவது குற்றயவில் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.ஜெயமணி, குற்றம்சாட்டப்பட்ட பாண்டியராஜுக்கு வீட்டின் பூட்டை உடைத்ததற்கு ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai