Enable Javscript for better performance
நாய்கள் துரத்தியதில் உயிரிழந்த மான்- Dinamani

சுடச்சுட

    

    மணிவிழுந்தான் பகுதியில் குடிநீர் தேடி வந்த மான், நாய்கள் துரத்தியதில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.
    சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்த மணிவிழுந்தான் அருகேயுள்ள ராமசேஷபுரத்தில் தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில் குடிநீரைத் தேடி சுமார் 2 வயதுடைய ஆண் மான் வந்துள்ளது. இதனைப் பார்த்த நாய்கள், மானை துரத்தியுள்ளன. இதில் பாய்ந்து சென்ற மான் கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மானை பிடித்து வைத்திருந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். வனத்துறையினர் நிகழ்விடத்துக்கு வந்து பார்த்தபோது மான் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து பிரேதப் பரிசோதனைக்காக மானை வனத்துறையினர் எடுத்துச் சென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai