Enable Javscript for better performance
பெண்ணை தாக்கி நகை பறித்த வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பெண்ணை தாக்கி நகை பறித்த வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிப்பு

    By DIN  |   Published on : 24th March 2018 05:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி நகை பறித்த வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
    புத்திரகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் வடமலை (64). இவரது மனைவி தமிழரசி (54). ஆசிரியை. கடந்த 2014-ஆம் ஆண்டில் பால் வாங்குவதற்காக வடமலை வெளியே சென்றிருந்தார். அப்போது வீட்டில் ஆசிரியை தமிழரசி மட்டும் தனியாக இருந்துள்ளார்.
    இதனை நோட்டமிட்ட வீரக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த கோபி (42) என்பவர் வீட்டுக்குள் புகுந்து தமிழரசியை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு, அவரது கழுத்தில் இருந்த 7 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்து சென்றார். இதில் தாலிச் சங்கிலியும், இரண்டு காசையும் திருடிச் சென்றுவிட்டார். தாலி மட்டும் தனியாக கழன்று வீட்டில் விழுந்து விட்டது.இதுகுறித்த புகாரின் பேரில் ஏத்தாப்பூர் போலீஸார், கோபியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில்அடைத்தனர்.
    இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த உதவி செஷன்ஸ் நீதிபதி ஆர்.சங்கர், குற்றவாளி கோபிக்கு இரண்டு வருட மெய்க்காவல் தண்டனையும், ரூ.2000 அபராதமும் மற்றும் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.5000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும், சிறையில் இருந்த காலங்களை கழித்தும் ,உத்தரவு பிறப்பித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai