Enable Javscript for better performance
மின்னல் பாய்ந்து இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    சேலம் உருக்காலை பகுதியில் மின்னல் பாய்ந்து ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இளைஞர் உயிரிழந்தார்.
    சேலத்தை அடுத்த இரும்பாலை ஓலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் குமார் (21). இவர் வியாழக்கிழமை மாலை அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது இடி, மின்னலுடன் லேசான மழை பெய்துள்ளது. இதையடுத்து குமார் அருகில் உள்ள மரத்தின் அடியில் ஒதுங்கி நின்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்னல் பாய்ந்ததில் குமார் அதே இடத்தில் உயிரிழந்தார். இதுதொடர்பாக இரும்பாலை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai