Enable Javscript for better performance
வறட்சி நிவாரணத் தொகையை வழங்கக் கோரிகாப்பீட்டு ஊழியரை சிறைபிடித்து போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    வறட்சி நிவாரணத் தொகையை வழங்கக் கோரி காப்பீட்டு ஊழியரை சிறைபிடித்து போராட்டம்

    By DIN  |   Published on : 24th March 2018 05:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சங்ககிரி வட்டம், தேவூர் குறுவட்டத்துக்குள்பட்ட புள்ளாகவுண்டம்பட்டி சுற்றியுள்ள விவசாயிகளுக்கு 2016 - 17-ஆம் ஆண்டுக்கான வறட்சி நிவாரணத் தொகை வழங்காததைக் கண்டித்து சேலம் தனியார் நிறுவனக் காப்பீட்டு ஊழியரை விவசாயிகள் சிறைபிடித்தனர்.
    புள்ளாகவுண்டம்பட்டி, புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம், காவேரிப்பட்டி, காவேரிப்பட்டி அக்ரஹாரம், புளியம்பட்டி, புதூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் 4,800 ஹெக்டர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகின்றனர். அப்பகுதிகளில் விவசாயிகள் வறட்சி நிவாரண திட்டத்தில் ஏக்கருக்கு ரூ.395 வீதம் செலுத்தியுள்ளனர். கடந்த 2016 - 2017-ஆம் ஆண்டுக்கு அரசு வறட்சி நிவாரணத் தொகை அறிவித்துள்ளது. இந்த நிலையில் 252 விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அதில் 40 பேருக்கு மட்டுமே நிவாரண தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர். மற்ற விவசாயிகளுக்கு பலமுறை வேளாண் அலுவலகத்தில் கேட்டும் நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள், மாவட்ட ஆட்சியர், சங்ககிரி வருவாய் கோட்டாட்சியரிடமும் கோரிக்கை வைத்துள்ளனர். இதனையடுத்து சங்ககிரி உதவி வேளாண் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த தனியார் காப்பீட்டு ஊழியர் முனியப்பனை விவசாயிகள் சிறைபிடித்து நிவாரணத்தொகையை வங்கிக் கணக்குகளில் வழங்கக் கோரி வலியுறுத்தினர். இதுகுறித்து சங்ககிரி உதவி வேளாண் அலுவலர் (பொறுப்பு) தேசிங்குராஜன், சேலம் வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்துக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து வேளாண் அலுவலர்கள் மற்றும் சங்ககிரி போலீஸார் விரைவில் நிவாரணத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai