Enable Javscript for better performance
வீடுகளின் பூட்டை உடைத்து நகை திருடியவருக்கு 2 ஆண்டு சிறை- Dinamani

சுடச்சுட

    

    வீடுகளின் பூட்டை உடைத்து நகை திருடியவருக்கு 2 ஆண்டு சிறை

    By DIN  |   Published on : 24th March 2018 05:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எடப்பாடி அங்காளம்மன் கோயில் வீதியில் மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து நகைகளை திருடியவருக்கு சங்ககிரி 2 -ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
    எடப்பாடி, அங்காளம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர்கள் இளங்குமார், சிவசுப்ரமணியன், முத்துமணி. இவர்களின் வீடுகளில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23-ஆம் தேதி இரவு பூட்டை உடைத்து நான்கரை பவுன் நகைகள் திருடப்பட்டது குறித்து எடப்பாடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.இதில் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள ராஜபாளையம், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி மகன் குமார் என்கின்ற விஜயகுமாரை கைது செய்து அவரிடமிருந்து நான்கரை பவுன் நகைகளைப் பறிமுதல் செய்து அவர் மீது சங்ககிரி 2-ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.ஜெயமணி, குற்றம் சாட்டப்பட்ட குமார் என்கின்ற விஜயகுமாருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai