Enable Javscript for better performance
40 ஆண்டுகளாக வீட்டுமனைப் பட்டா கேட்டு போராடும் கிராம மக்கள்: அரசின் நலத்திட்ட உதவிகளை பெறமுடியால் தவ- Dinamani

சுடச்சுட

    

    40 ஆண்டுகளாக வீட்டுமனைப் பட்டா கேட்டு போராடும் கிராம மக்கள்: அரசின் நலத்திட்ட உதவிகளை பெறமுடியால் தவிப்பு

    By DIN  |   Published on : 24th March 2018 05:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாழப்பாடி பேரூராட்சி ஆத்துமேடு காமராஜ் நகர் மக்கள், 40 ஆண்டுகளாக குடியிருப்பு வீடுகளுக்கு பட்டா கேட்டு போராடி வருகின்றனர். இதனால் அரசின் நலத்திட்டஉதவிகளை பெறமுடியாமல் தவித்து வருகின்றனர்.
    வாழப்பாடி பேரூராட்சியில் அக்ரஹார வாழப்பாடி புதுப்பாளையம் வருவாய் கிராமத்துக்கு உள்பட்டது ஆத்துமேடு காமராஜ் நகர்.
    ஏறக்குறைய இரு ஏக்கர் பரப்பளவில், வருவாய்த்துறையினர் தோப்பு புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ள இப் பகுதியில், 40 வீடுகள் உள்ளன. இங்கு ஏழை எளிய மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
    இவர்களின் குடியிருப்பு வீடுகளுக்கு பட்டா இல்லாதாதல் பசுமைவீடுகள், தொகுப்பு வீடுகள், வங்கிக் கடனுதவி உள்ளிட்ட எவ்வித அரசு நலத் திட்டங்களையும் பெற முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
    குடியிருப்பு வீடுகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குமாறு கேட்டு அப்பகுதி மக்கள் கடந்த 40 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இருப்பினும், பட்டா வழங்குவதில் இழுபறி நீடித்து வருகிறது. குடிசைகளை அப்புறப்படுத்திவிட்டு, தரமான வீடுகளை கட்டுவதற்கு கூட வழியின்றி பரிதவித்து வருகின்றனர்.
    பலமுறை இப்பகுதியை களஆய்வு செய்த வருவாய்த்துறை மற்றும் நிலஅளவைத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் வாயிலாக அரசு அறிக்கை சமர்ப்பித்தும் இதுவரை பட்டா வழங்கும் திட்டம் முழுமை பெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
    எனவே, முழுமூச்சோடு களஆய்வு மற்றும் நில அளவை பணிகளை மேற்கொண்டு, பட்டா கிடைக்காமல் பரிதவித்து காமராஜ்நகர் பகுதி மக்களுக்கு, வருவாய்த்துறை பட்டா வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
    40 ஆண்டுகளுக்கு முன்னர் எங்களது பெற்றோர், இப்பகுதியில் குடியேறினர். ஒரு தலைமுறை கடந்தும் குடியிருப்பு வீடுகளுக்கு இதுவரை பட்டா பெற முடியவில்லை.
    அதனால், அரசின் எவ்வித நலத்திட்ட உதவிகளையும் பெற முடியாமல் தவித்து வருகிறோம். எனவே, எங்களின் கோரிக்கையை ஏற்று, அனைத்து வீடுகளுக்கும் பட்டா வழங்கிட வருவாய்த்துறை அதிகாரிகள், காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai