Enable Javscript for better performance
ஆத்தூரில் இன்று விவசாயக் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    ஆத்தூரை அடுத்துள்ள அம்மம்பாளையம் கொங்கு திருமண மாளிகையில் விவசாயக் கண்காட்சி  சனிக்கிழமை நடைபெறுகிறது.
    ஆத்தூர் ராசி விதை நிறுவனம்,  அக்சென் காய்கறி விதை நிறுவனங்கள் ஆகியவற்றின் சார்பில் சனிக்கிழமை தொடங்கி 
    திங்கள்கிழமை வரை கண்காட்சி நடைபெறுகிறது. சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினிராம்தாஸ் தலைமையில் இந்தக் கண்காட்சியை விவசாயத் துறை அமைச்சர் துரைக்கண்ணு தொடக்கி வைக்கிறார்.
    இதுகுறித்து ராசி விதை நிறுவனங்களின் தலைவர் எம்.இராமசாமி கூறியது:-
    கோவை, ஈரோடு,   சென்னை பெரு நகரங்களில் நடைபெற்று வந்த கண்காட்சி  ஆத்தூரில் முதல்முறையாக நடக்கிறது. சேலம் மாவட்டம் விதை உற்பத்தியில் முன்னோடியாக இருக்கிறது. கடந்த 5 வருடங்களாக வறட்சி காலத்திலும் பருத்தி,  காய்கறி விதைகளால் சேலம் மாவட்டத்தில் உள்ள சுமார் 12 ஆயிரம் விவசாயிகள் 25 ஆயிரம் ஏக்கர் அளவில் பயிரிட்டு வளம் பெற்று இருக்கிறோம்.இதனால் சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் பயனடைந்து உள்ளனர்.   
    இந்தக் கண்காட்சியில் கால்நடை பராமரிப்பு,நீர் மேலாண்மை குறித்த கருத்தரங்கம் நடைபெறுகிறது என்றார். பேட்டியின்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்க இணைச் செயலர் ஏ.கே.இராமசாமி, விவசாயிகள் சங்க முன்னோடி கோவிந்தராஜ் உள்ளிட்டோர்  உடனிருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai