Enable Javscript for better performance
தீக்குளித்த தொழிலாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    எடப்பாடி அருகே தீக்குளித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
    எடப்பாடியை  அடுத்த கோரணம்பட்டியைச் சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளி சரவணன் (40).  இவருக்கு சந்திரா என்ற மனைவியும்,  இரு மகள்களும்,  ஒரு மகனும் உள்ளனர். 
    கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி மது போதையில் வீட்டுக்கு வந்த சரவணன் தனது மனைவி சந்திராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம்.  இதையடுத்து,  குடும்பத்தினரை மிரட்டும் நோக்கில் தான் தீக்குளித்து தற்கொலை செய்யப்போவதாகக் கூறிய சரவணன்,  மண்ணெண்ணையை தன் மீது ஊற்றிக் கொண்டு சத்தம் போட்டாராம். இதையடுத்து,  அவர் மீது குளிர்ந்த நீரை குடும்பத்தினர்  ஊற்றினர். சற்று நேரத்தித்தில் அமைதியான அவர் குளிர் தாங்க முடியவில்லை எனக் கூறி,  பீடி புகைக்க முயன்றாராம். அப்போது,  அவர் மீது  இருந்த மண்ணெண்ணைய்  தீப்பற்றியது.
    பலத்த காயம்  அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,  அவர் வெள்ளிக்கிழமை இறந்தார்.
    இதுகுறித்து  எடப்பாடி போலீஸார்  வழக்குப் பதிந்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai