Enable Javscript for better performance
முருகேசன் பாலிடெக்னிக் கல்லூரியில்  வளாகத் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    வாழப்பாடியை அடுத்த கருமாபுரம் முருகேசன் பாலிடெக்னிக் கல்லூரியில்  ராயல் என்பீல்டு மோட்டார்ஸ் நிறுவனம் அண்மையில் நடத்திய வளாகத் தேர்வில்,  50 மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர்.
    முகாமுக்கு நிறுவனத்தின் மனித வளத்துறை அலுவலர் சீனிவாசன் தலைமை வகித்தார்.  முகாமில்  200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.  இறுதியாக 50 பேர் மாதம் ரூ. 17,000 ஊதியத்துக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
    கல்லூரித் தாளாளர் கே.ஏ.முருகேசன், பொருளாளர் மு. மாறன்,  கல்லூரி முதல்வர் கேப்டன் வை. புனிதன், கல்லூரித் துணை முதல்வர் ஆர். ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    முருகேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் இதுவரை நடைபெற்றுள்ள வளாகத் தேர்வுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்புக்கான பணி நியமனம் பெற்றுள்ளனர் என்று கல்லூரி நிர்வாகிகள் கூறினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai