Enable Javscript for better performance
லாரி- கார் மோதல்: குழந்தை உட்பட 2 பேர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    லாரியின் பின்புறம் கார் மோதியதில்,   காரில் பயணித்த குழந்தை உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
    சேலம்  அயோத்திப்பட்டணத்தில் பேளூர் சாலையில் உள்ள தொடக்கப் பள்ளி எதிரில் வசித்து வருபவர் பெருமாள்.  இவர் தனது குடும்பத்தினருடன் பங்குனி உத்திர விழாவுக்காக பழனிக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை வாடகை காரில்
    புறப்பட்டார்.
    காரை  ஓட்டுநர் கலைமணி ஓட்டிச் சென்றுள்ளார்.  கார் வைகுந்தம், காளிப்பட்டி பிரிவு சாலை அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது சாலையில் பழுதாகி  எந்த சமிக்ஞைகளும் செய்யாமல் நின்று கொண்டிருந்ததாகக் கூறப்படும் லாரியின் பின்புறத்தில் மோதியது. இதில், பலத்த காயமடைந்த பெருமாள் நிகழ்விடத்திலேயே இறந்தார்.
    காரில் பயணித்த விஜயகுமாரின் 8 மாத குழந்தை ரக்ஜிதா சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டு, அங்கு இறந்தது. மேலும்,  விபத்தில் காயம் அடைந்த பெருமாள் மனைவி சிவகாமி(55), பெருமாள் மகன் விஜயகுமார் (34) இவரது மனைவி அங்கம்மாதேவி (24),  பெருமாள் மற்றொரு மகன் ராஜூ 40) இவரது மனைவி சரஸ்வதி (34), கார் ஓட்டுநர் கலைமணி (21) ஆகியோர் சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai