Enable Javscript for better performance
வடசென்னிமலையில் பங்குனி உத்திரத் தேரோட்டம்- Dinamani

சுடச்சுட

    

    வடசென்னிமலையில் பங்குனி உத்திரத் திருத்தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    ஆத்தூரை அடுத்துள்ள காட்டுக்கோட்டை வடசென்னிமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை காலை சிறப்பு அபிஷேகமும்,  ஆராதனையும் நடைபெற்றன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முருகன் அருள்பாலித்தார். பின்னர், அன்னதானம் நடைபெற்றது.
    இதையடுத்து, மாலை 4 மணி அளவில் வடசென்னிமலை அடிவாரத்தில் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சுவாமி எழுந்தருளினார்.
    கோட்டாட்சியர் ம.செல்வன்,  மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவர் ஆர்.இளங்கோவன், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் க.காமராஜ்,  எம்எல்ஏக்கள் அ.மருதமுத்து,  ஆர்.எம்.சின்னதம்பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    தம்மம்பட்டியில்...
    பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, தம்மம்பட்டி,  கெங்கவல்லி பகுதிகளில்  முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
    தம்மம்பட்டி திருமண்கரடு ஸ்ரீபாலதண்டாயுதபாணி கோயிலில் முருகனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு,  அலங்காரம் செய்யப்பட்டது.  இதில் பங்கேற்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மேலும், நேர்த்திக் கடன் நிறைவேற்றுவதற்காக பக்தர்கள் காவடி  எடுத்து ஊர்வலமாகச்சென்றனர்.
    இதேபோல், தம்மம்பட்டி சிவன் கோயில்,  செந்தாரப்பட்டி ஓணான்கரடிலுள்ள முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் முருகனுக்கு சிறப்பு பூஜைகள் , வழிபாடுகள் நடைபெற்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai