Enable Javscript for better performance
விமான நிலைய விரிவாக்கப் பணிக்கு சென்றஅரசு அலுவலர்கள் சிறைபிடிப்பு- Dinamani

சுடச்சுட

    

    விமான நிலைய விரிவாக்கப் பணிக்கு சென்ற அரசு அலுவலர்கள் சிறைபிடிப்பு

    By DIN  |   Published on : 31st March 2018 09:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விமான நிலைய விரிவாக்கப் பணிக்குச் சென்ற அரசு அலுவலர்களை விவசாயிகள் சிறைபிடித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரத்தில் உள்ள சேலம் விமான நிலையம் சுமார் 163 ஏக்கரில் 1993-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.   இந்த நிலையில் மத்திய அரசின் விமான உதான் திட்டத்தில் கடந்த 25-ஆம் தேதி முதல் சென்னைக்கு விமானப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. 
    இதனிடையே விமான நிலையத்தைக் கூடுதலாக சுமார் 570 ஏக்கரில் விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கையை  இரு ஆண்டுகளாக வருவாய்த் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.  இந்தச் சூழ்நிலையில் விவசாய நிலங்களைக் கொடுக்க மாட்டோம் என்று தும்பிபாடி,  சிக்கனம்பட்டி,  பொட்டியபுரம், காமலாபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து, நிலங்களை ஆய்வு செய்ய வருகை தரும் அரசு அலுவலர்களையும் தொடர்ந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    இந்தநிலையில் தும்பிபாடி கிராமத்தில் உள்ள இரு குன்றுகளில் புதியதாகத் தொடர்பு உயர்கோபுரம் அமைக்க ஆய்வு செய்வதற்காக சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் தலைமையிலான வருவாய்த் துறையினரும், விமான நிலைய அதிகாரிகளும் வெள்ளிக்கிழமை வருகை தந்தனர். இதையறிந்த கிராம மக்கள் திரண்டு,  நிலம் கொடுக்க முடியாது என்று கருத்தை அரசுக்கு அனுப்புமாறு கூறி சுமார் 3 மணி நேரமாக அரசு அலுவலர்களை சிறைபிடித்தனர்.
    இதுதொடர்பாக  மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் கூறுகையில்,  கோரிக்கைகள் குறித்து ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வந்து சந்தித்துப் பேசுமாறு கூறினார். 
    பின்னர் போலீஸாரின் சமரசத்தை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai