சேலத்தில்  டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு: 36,236 பேர் எழுதுகின்றனர்

சேலத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 2 தேர்வை 104 மையங்களில் 36,236 பேர் எழுதுகின்றனர்.

சேலத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 2 தேர்வை 104 மையங்களில் 36,236 பேர் எழுதுகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி 2 தேர்வு 104 மையங்களில் 134 தேர்வு கூடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இத்தேர்வை சுமார் 36,236 பேர் எழுதுகின்றனர்.
அனைத்துத் தேர்வு மையங்களிலும் தேர்வு நடைபெறுவதை விடியோ பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 134 தேர்வு கூடங்களில் 1 தேர்வு மையம் கூர்நோக்கு தேர்வு கூடமாகத் தேர்வு செய்யப்பட்டு அவற்றில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டும், கூடுதல் விடியோ கேமரா பதிவு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேர்வைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும் படை, கண்காணிப்புக் குழு, தலைமைக் கண்காணிப்பாளர் ஆகியோர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் விதிமுறைகளின்படி  வினாத்தாள் வழங்குதல், விடைத்தாள் வழங்குதல், விடைத்தாள் சேகரித்தல், தேர்வு எழுதும் நேரம் மற்றும் தேர்வு எழுதுபவர்களின் நுழைவுச் சீட்டு ஆகியவற்றை சரிபார்த்தல் போன்ற பணிகளை சிறப்பான முறையில் செய்திட  அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக,  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com