சுடச்சுட

  

  சேலத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 20 ரௌடிகளை போலீஸார் கைது செய்தனர்.
  சேலம் மாநகர பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து நகைப் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து குற்றப் பின்னணி உள்ள ரௌடிகளை கைது செய்ய மாநகர காவல் ஆணையர்  கே.சங்கர் உத்தரவிட்டார்.அதன்பேரில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் சுமார் 20 ரௌடிகளை போலீஸார் கைது செய்தனர். இதில் ஜவகர்,  பிரகாஷ், வீச்சுக்குமார், பிரபு,  தாமரைச்செல்வன்,  ஜீவா, மணி, சேட்டு, சுரேஷ் உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில் ஜவகர் மீது இரண்டு கொலை வழக்குகள், ஒரு கொலை முயற்சி வழக்கு, ஆள்கடத்தல் மற்றும் வழிப்பறிவழக்கு என மொத்த 18 வழக்குகளும், பிரகாஷ் மீது ஒரு கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு, இரண்டு வழிப்பறி வழக்குகள் என மொத்தம் 21 வழக்குகளும் உள்ளன. மேலும் பிரகாஷ் மூன்று முறையும், வீச்சுக்குமார் மற்றும் ஜவகர் ஆகியோர் தலா ஒரு முறையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த தாமரைச் செல்வன் மீது 13 வழக்குகளும், அஸ்தம்பட்டியைச் சேர்ந்த ஜாபர் அலி மீது 10 வழக்குகளும் உள்ளன. சூரமங்கலத்தில் அற்புதராஜ் என்பவர் மீது 4 வழக்குகளும் உள்ளன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai