வாழப்பாடி ஆசிரியைகளுக்கு விருது

வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியைகளின் சேவையை பாராட்டி, நேஷனல் பில்டர் விருது வழங்கப்பட்டது.

வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியைகளின் சேவையை பாராட்டி, நேஷனல் பில்டர் விருது வழங்கப்பட்டது.
சேலம் யங் டவுன் ரோட்டரி சங்கத்தின் சார்பில், ஆண்டுதோறும் கிராமப்புற அரசுப் பள்ளிகளில் கல்விச் சேவையாற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்து, ஆசிரியர் தினத்தன்று நேஷனல் பில்டர் விருது வழங்கி பாராட்டி வருகின்றனர். 
நிகழாண்டு வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியைகள் வாழப்பாடி சத்தியக்குமாரி, சேசன்சாவடி நித்யா, முத்தம்பட்டி காலனி சிவகாமசுந்தரி, மன்னார்பாளையம் கலைச்செல்வி, கவர்கல்பட்டி மணிமேகலை, குறிச்சி ராஜேஸ்வரி, சி.பி.வலசு மீனாள், மன்னாயக்கன்பட்டி இலாகிபேகம் ஆகியோர் நேஷனல் பில்டர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சேலம் யங் டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் ஹரிசங்கர், செயலாளர் எழில்அமுதன், பொருளாளர் சங்கர், பட்டையத் தலைவர் தியாகராஜன், சங்க இயக்குநர் பாலச்சந்தர் ஆகியோர், விருது பெற்றவர்களுக்கு நினைவுப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.
இந்தவிழாவில், வாழப்பாடி அரிமா சங்க இயக்குநர்கள் கோ.முருகேசன், ஜவஹர், எம்கோ மற்றும் ஆசிரியை ஷபீராபானு ஆகியோர் பாராட்டுத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com