பெரியார் பல்கலை. மண்டல கிரிக்கெட் போட்டியில் சேலம் ஏவிஎஸ் கல்லூரி முதலிடம்

பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டித் தொடரில் சேலம் ஏவிஎஸ் கல்லூரி அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.

பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டித் தொடரில் சேலம் ஏவிஎஸ் கல்லூரி அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.
 சேலத்தை தலைமையிடமாகக் கொண்டுள்ள பெரியார் பல்கலைக்கழகத்துடன் தருமபுரி,நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கலை அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.பல்கலைக்கழக அளவிலான மண்டல கிரிக்கெட் போட்டித் தொடர் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.நிகழாண்டுக்கான கிரிக்கெட் போட்டிகள் கடந்த 3ஆம் தேதி தொடங்கின. மண்டல கிரிக்கெட் போட்டித் தொடரில் 47 கல்லூரிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடின. பெரியார் பல்கலைக்கழகத்தில் மூன்று மைதானங்களிலும், நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரியிலும் போட்டிகள் நாக்-அவுட் முறையில் நடைபெற்றன. இந்தப் போட்டித் தொடரில் இறுதிப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சேலம் ஏவிஎஸ் கல்லூரி அணியும், நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரி அணியும் மோதின. முதலில் விளையாடிய ஏவிஎஸ் கல்லூரி அணி 175 ரன்கள் குவித்தது. இதையடுத்து ஆடிய கந்தசாமி கண்டர் கல்லூரி அணி 20 ஓவர் முடிவில் 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டித் தொடரில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்ற சேலம் ஏவிஎஸ் கல்லூரி அணிக்கு பரிசுக் கோப்பையை பெரியார் பல்கலை. பதிவாளர்(பொறுப்பு) கே.தங்கவேல் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.
 இதேபோன்று, 2ஆம் இடம் பிடித்த கந்தசாமி கண்டர் கல்லூரி அணி, 3-ஆம் இடம்பிடித்த ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரி அணி வீரர்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மண்டல கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் தென்னிந்திய அளவிலான போட்டித் தொடரில் விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 இந்நிகழ்ச்சியில் பெரியார் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் வெங்கடாசலம், போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் செங்கமலை,சிவக்குமார் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com