ஆத்தூரில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

ஆத்தூரில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வரை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

ஆத்தூரில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வரை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் எல்ஆர்சி நகரில் உள்ள காசிலிங்கம் மகன் செந்தில்குமார் (44) வீட்டில் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு, வாகன புதுப்பித்தலுக்காக ரூ.25 ஆயிரம் லஞ்சம் பேசி ஆத்தூரை சேர்ந்த செந்தில்குமார் மூலம் பரிவர்த்தனை நடைபெற்றதாம். இதனையடுத்து புகாரின் பேரில் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 இந்நிலையில், ஆத்தூரில் இருக்கும் செந்தில்குமார் வீட்டுக்கு சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் செவ்வாய்க்கிழமை மாலை வந்தவர்கள் நள்ளிரவு வரை தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியது: மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுக்கு, செந்தில்குமார் லஞ்சம் வாங்கி கொடுத்ததாகவும், அவரது வீட்டில் ரூ.35 லட்சம் இருந்ததாகவும் தெரிவித்தனர்.
மேலும், செந்தில்குமார் வீட்டில் சுமார் 100 பவுனுக்கும் மேல் நகைகள், 15 வங்கிக் கணக்குப் புத்தகத்தை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் 2006-இல் பாபு சொத்து குவிப்பு வழக்கில் சிக்கியபோது செந்தில்குமார் வீட்டில் இருந்து பலகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்ததாக தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com