பெண் காவலர் தற்கொலை வழக்கு: கணவர் கைது
By DIN | Published on : 15th September 2018 08:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பெண் காவலர் தற்கொலை வழக்கில், கணவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் மாமனார், மாமியார் உள்ளிட்ட 4 பேரைத் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் காவலராகப் பணியாற்றி வந்தவர் புவனேஸ்வரி. இவருக்கும் போடிநாயகன்பட்டியைச் சேர்ந்த கௌதமனுக்கும் 2014-ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் கடந்த 10-ஆம் தேதி புவனேஸ்வரி அவரது பெற்றோர் வீட்டில் தூக்கிட்டுக் கொண்டாராம். இதில், அவர் இறந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சூரமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதனிடையே, விவாகரத்து கோரி நோட்டீஸ் அனுப்பியதால் மனமுடைந்து புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதாக, இறப்பதற்கு முன் அவர் தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதத்தில் கூறியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, கௌதமனை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அவரது பெற்றோர், 2 சகோதரிகள் ஆகிய 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.