மணிவிழுந்தான் ஊராட்சியில்  ஆட்சியர் ஆய்வு

தூய்மை பாரதத் திட்டம் குறித்து மணிவிழுந்தானைச் சேர்ந்தோரிடம் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக்

தூய்மை பாரதத் திட்டம் குறித்து மணிவிழுந்தானைச் சேர்ந்தோரிடம் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி முறையில் சனிக்கிழமை பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
ஆத்தூரை அடுத்துள்ள மணிவிழுந்தான் வடக்கு காலனியில் உள்ள அனைத்து வீடுகளிலும் கழிவறைகளை அமைத்து புதுப்பிக்கப்பட்டுள்ளன.  இதையடுத்து, காணொலிக்காட்சி முறையில் பிரதமர் பேசுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ்  வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது குடிநீர் வடிகால்,  சுகாதார அமைச்சகத்தின் மத்திய இணைச் செயலர் அருண் பரோகா,  ஆத்தூர் கோட்டாட்சியர் ம.செல்வன், வட்டாட்சியர் செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,குணசேகரன், வெங்கடகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com