1,500-க்கும் அதிகமான விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட சுமார் 1,500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் சனிக்கிழமை விசர்ஜனம் செய்யப்பட்டன.


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட சுமார் 1,500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் சனிக்கிழமை விசர்ஜனம் செய்யப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில், சேலம் நகரில் 778 விநாயகர் சிலைகளும், மாவட்டப் பகுதிகளில் 1,058 சிலைகள் என மொத்தம் 1,836 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மூன்று நாள்கள் பூஜைக்குப் பிறகு சனிக்கிழமை விசர்ஜனம் செய்யப்பட்டன. எல்லைபிடாரியம்மன் கோயில் பகுதியில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தில் விநாயகர் சிலைகள் மூக்கனேரிக்கு எடுத்து செல்லப்பட்டு விசர்ஜனம் செய்யப்பட்டன.
இதில் சேலம் மாநகர பகுதியில் மூக்கனேரியில் 156, குமரகிரியில் 50 சிலைகளும் விசர்ஜனம் செய்யப்பட்டதாகப் போலீஸார் தெரிவித்தனர். மீதமுள்ள நூற்றுக்கணக்கான சிலைகள் மேட்டூர், பூலாம்பட்டி, பரமத்திவேலூர் உள்ளிட்ட இடங்களுக்கு எடுத்து சென்று விசர்ஜனம் செய்யப்பட்டதாகப் போலீஸார் தெரிவித்தனர். அதேபோல சேலம் புறநகர் அடங்கிய மாவட்ட பகுதியில் வைக்கப்பட்டிருந்த 1,058 சிலைகளில் பெரும்பாலான சிலைகள் அனுமதிக்கப்பட்ட நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்யப்பட்டதாகவும், மீதமுள்ள சிலைகள் ஓரிரு நாளில் எடுத்து செல்லப்பட்டு விசர்ஜனம் செய்யப்படவுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
மேட்டூரில்... மேட்டூர் காவிரியில் ஒரே நாளில் 1,470 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
பல பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்தச் சிலைகளை வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு காவிரியில் கரைக்கப்படுகின்றன.
கொளத்தூரில் பண்ணவாடி பரிசல்துறை பகுதியிலும், மேச்சேரியில் கூணான்டியூரிலும் கருமலைக்கூடல் காவல்நிலைய பகுதியில் திப்பம்பட்டியிலும், மேட்டூர் காவேரி பாலம் பகுதியிலும் விநாயகர் சிலைகள் காவிரியில் கரைக்கப்பட்டன.
சங்ககிரியில்.. தேவூர் அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றில் வெள்ளி, சனிக்கிழமைகளில் 391 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.
சங்ககிரி ஊரக பகுதி, சங்ககிரி, ஓமலூர், சேலம் மாநகர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 91 சிலைகளும், சனிக்கிழமை நாமக்கல், சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 391 விநாயகர் சிலைகள் கல்வடங்கம், காவேரிப்பட்டி, மேட்டாங்காடு ஆகிய பரிசல்துறைகளில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
தம்மம்பட்டியில்... கெங்கவல்லி வட்டத்தில் கெங்கவல்லி மற்றும் வீரகனூர் ஊர்களில் வைக்கப்பட்டிருந்த 7 சிலைகளும் முசிறி மற்றும் திருச்சி காவிரி ஆற்றில் சனிக்கிழமை கரைக்கப்பட்டன. தம்மம்பட்டி நேருநகர் காலனியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை, சேரடியில் ஆற்றில் கரைக்கப்பட்டது.
ஏற்காட்டில்.. ஏற்காடு மற்றும் 67 கிராமங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளில் சனிக்கிழமை 8 சிலைகள் ஏற்காடு ஏரியில் கரைக்கப்பட்டன.
ஏற்காடு காந்தி பூங்கா அருகில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விநாயகர் சிலை கரைப்பில் சுற்றுலா படகு இல்ல பணியாளர்கள் சிலைகளை விசை படகில் எடுத்துச்சென்று கரைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com