அண்ணா பிறந்தநாள் விழா: திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

மறைந்த முதல்வர் அண்ணாவின் 110-ஆவது பிறந்தநாளையொட்டி சேலத்தில் திமுக, அதிமுக, அமமுக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் அவரது


மறைந்த முதல்வர் அண்ணாவின் 110-ஆவது பிறந்தநாளையொட்டி சேலத்தில் திமுக, அதிமுக, அமமுக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சேலம் பழைய பேருந்து நிலையப் பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மத்திய மாவட்ட திமுக சார்பில் மாவட்டச் செயலாளரும், வடக்குத் தொகுதி எம்எல்ஏ-வுமான வழக்குரைஞர் ஆர். ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் நிர்வாகிகள் கலையமுதன், சுபாஷ், சூடாணி, ரகுபதி, தாமரைக்கண்ணன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சேலம் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அதன் பொறுப்பாளர் வீரபாண்டி ஆ. ராஜா தலைமையிலான திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் பாரப்பட்டி சுரேஷ்குமார், மாணிக்கம், சந்திரமோகன், முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதைத்தொடர்ந்து சேலம் மாநகர மாவட்ட அதிமுக சார்பில் எம்எல்ஏ-க்கள் ஜி.வெங்கடாஜலம், ஏ.பி.சக்திவேல், எம்.பி. வி.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் எம்எல்ஏ எம்.கே.செல்வராஜு, முன்னாள் மேயர் எஸ்.சௌண்டப்பன், பகுதி செயலாளர் சரவணன், தியாகராஜன், சண்முகம், யாதவமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாநகர மாவட்டச் செயலாளர் எஸ்.இ. வெங்கடாசலம், புறநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.கே. செல்வம் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மதிமுக சார்பில் வழக்குரைஞர் ஆனந்தராஜ் தலைமையிலான கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சங்ககிரியில்... பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா சங்ககிரி ஒன்றி, நகர திமுக சார்பில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
சங்ககிரி ஒன்றியச் செயலர் (பொ) எஸ்.பி.நிர்மலா விழாவுக்குத் தலைமை வகித்து அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவித்தார்.
நகரச் செயலர் (பொறுப்பு) குப்புசாமி, மாவட்ட வழக்குரைஞர் அணி துணை அமைப்பாளர் வி.என்.ராஜா, பழனிமலை, கொங்கு வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தம்மம்பட்டியில்... தம்மம்பட்டியில் நகர திமுக சார்பில் அண்ணா பிறந்தநாள்விழா நகர திமுக பொறுப்பாளர் ந.சண்முகம் தலைமையிலும், நகர அவைத்தலைவர் சின்னுசாமி முன்னிலையிலும் நடைபெற்றது.
கெங்கவல்லியில் நடந்த விழாவில் ஒன்றிய திமுக பொறுப்பாளர் அகிலன் கட்சிக்கொடியேற்றினார். கூடமலை ஊராட்சி பேருந்து நிறுத்தத்திலுள்ள அண்ணா சிலைக்கு
முன்னாள் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் கு.சின்னதுரை மாலை அணிவித்தார்.
ஓமலூரில்.... தாரமங்கலத்தில் அண்ணா பிறந்தநாள் விழாவில் தாரமங்கலம் ஒன்றிய திமுக சார்பில் தலைமை செயற்குழு உறுப்பினர்அம்மாசி தலைமையில் திமுகவினர் தாரமங்கலம் நகர் முழுக்க மூன்று கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாகச் சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து சேலம் புறநகர் மாவட்ட அதிமுகவினர் நூற்றுக்கணக்கானோர் தாரமங்கலம் எம்.ஜி.ஆர் சிலையில் இருந்து ஊர்வலத்தை தொடங்கினர். அண்ணா சிலைக்கு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜா, மனோன்மணி, வெற்றிவேல், முன்னாள் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பல்பாக்கி கிருஷ்ணன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
இதேபோல அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர், கட்சியின் அமைப்புச் செயலாளர் எஸ்.கே.செல்வம் தலைமையில் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்ரைஞர் கே.கே.மாதேஸ்வரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
ஆத்தூரில்... திமுக நகர செயலாளர் கே.பாலசுப்ரமணியம் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் முல்லை பன்னீர்செல்வம், மாவட்ட பிரதிநிதி எம்.மாணிக்கம்,நூத்தப்பூரார் துரை உடையார்,முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆத்தூர் ஒன்றிய செயலாளர் வி.செழியன் தலைமையில் அண்ணா படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com