உயர்அழுத்த மின் கோபுரம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து மனு

விவசாய நிலத்தில் உயர்அழுத்த மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சங்ககிரி தலைமையிடத்து

விவசாய நிலத்தில் உயர்அழுத்த மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சங்ககிரி தலைமையிடத்து துணை வட்டாட்சியரிடம் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. 
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் ஏ.ராமமூர்த்தி, சங்ககிரி வட்டச் செயலர் ஆர்.ராஜேந்திரன், கொங்கு பாதுகாப்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், உயர்நீதிமன்ற வழக்குரைஞருமான ஈசான், ஈரோடு மாவட்டப் பொறுப்பாளர் கவின், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க நிர்வாகி பொன்னையன், அனைத்து விவசாயகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஜெயக்குமாரிடம் அளித்துள்ள மனு விவரம்:
சங்ககிரி வட்டம், மஞ்சக்கல்பட்டியை அடுத்த அலாவகவுண்டன் காடு பகுதியைச் சேர்ந்த அழகப்பன் மகன் முத்துசாமி, பாத்தியப்பட்ட வேளாண் நிலத்தில் விவசாயம் செய்து குடும்பம் நடத்தி வருகிறார். அவரது விவசாய நிலத்தில் பவர்கிரிட் நிறுவனத்தினர் அனுமதியில்லாமல் மின்கோபுரம், மின்பாதைகள் அமைக்கும் பணியை செய்து வருகின்றனர். விவசாயியின் அனுபவ உரிமையை கையகப்படுத்தாமல் நிலத்துக்குள் திட்டப் பணிகளை தொடங்குவது அவரது சொத்துரிமையை பாதிக்கிறது. உயர்அழுத்த மின் கோபுரங்கள், மின்பாதைகள் அமைப்பதால் அதன் அருகிலும் அடிப்பகுதியிலும் தொடர்ந்து வேலை செய்பவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் மற்றும் விவசாயமும் பாதிப்படையும். மேலும், நிலத்தின் மதிப்பும் வீழ்ச்சி அடையும்.
எனவே, விவசாயி நிலத்தில் பவர்கிரிட் நிறுவனம் ஏற்படுத்திய சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், மின் திட்டப்  பாதையை விவசாயியின் விவசாயம் மற்றும் அவரது வாழ்வாதாரத்தை  பாதிக்காத வகையில் ஓடை புறம்போக்கு வழியாகவோ, சாலை ஓரங்களிலோ கேபிள் அமைத்து செல்ல  வேண்டுமென அதில் 
குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com