திமுக கூட்டணி கட்சியினர் வாக்குச் சேகரிப்பு
By DIN | Published On : 04th April 2019 10:06 AM | Last Updated : 04th April 2019 10:06 AM | அ+அ அ- |

ஆத்தூர் நகராட்சி பகுதிகளில் திமுக கூட்டணி கட்சியினர் திமுக வேட்பாளர் பொன். கெளதம சிகாமணிக்கு செவ்வாய்க்கிழமை வாக்குகள் சேகரித்தனர்.
ஆத்தூர் திமுக நகர செயலாளர் கே.பாலசுப்ரமணியம் தலைமையில் பிரசாரம் நடைபெற்றது.
இதில் நகராட்சி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் திமுக மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முல்லை பன்னீர்செல்வம், மாவட்ட பிரதிநிதி ஏ. மாணிக்கம், திமுக நகரத் துணைச் செயலாளர் ஏ.ஜி. ராமச்சந்திரன், நூத்தப்பூரார் துரை உடையார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.