மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவேன்
By DIN | Published On : 04th April 2019 10:07 AM | Last Updated : 04th April 2019 10:07 AM | அ+அ அ- |

நான் வெற்றிபெற்றால் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவேன் என கள்ளக்குறிச்சி தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷ் கூறினார்.
கள்ளக்குறிச்சி தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷ், கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட புளியங்குறிச்சி, வெள்ளையூர், பகடப்பாடி, கிழக்குராஜா பாளையம், கவர்பனை, லத்துவாடி, திட்டச்சேரி, இலுப்பநத்தம், வீரகனூர், வேப்பம்பூண்டியில் வாக்கு சேகரித்தார்.
அவர் வீரகனூரில் பேசும் போது, கள்ளக்குறிச்சி எம்.பி. ஆன உடன், இப்பகுதி மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் உடனுக்குடன் செய்து தருவேன் என்றார். அவருடன் அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.