Enable Javscript for better performance
சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளர்களுக்கான சீட்டு வழங்கல்- Dinamani

சுடச்சுட

    

    சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளர்களுக்கான சீட்டு வழங்கல்

    By DIN  |   Published on : 16th April 2019 09:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட சங்ககிரி சட்டப்பேரவையில் உள்ள வாக்காளர்களுக்கான வாக்குச்சாவடி சீட்டு வழங்கும் பணியில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் திங்கள்கிழமை ஈடுபட்டனர். 
    நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட சங்ககிரி சட்டப்பேரவையில் சங்ககிரி, மகுடஞ்சாவடி, தாரமங்கலம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களும், சங்ககிரி, தேவூர், அரசிராமணி, இளம்பிள்ளை, இடங்கணசாலை தாரமங்கலம் ஆகிய பேரூராட்சி பகுதிகளும்  உள்ளன.
    இத் தொகுதியில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட சிறப்பு முகாமிற்கு பின்னர் 1,33,782 ஆண் வாக்காளர்களும், 1,29,540 பெண்வாக்காளர்களும்,  13 இதர வாக்காளர்கள் உட்பட மொத்தம் 2,63,335 பேர் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
    சங்ககிரி சட்டப்பேரவை தொகுதிகளில் 311 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ் வாக்குச் சாவடி பகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கான வாக்குச் சாவடி சீட்டுகளை வழங்கும் பணியில்  வாக்குச் சாவடி  நிலைய அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai