சுடச்சுட

  

  சேலம் அரசு கலைக் கல்லூரியில் விண்ணப்ப விநியோகம்  தொடக்கம்

  By DIN  |   Published on : 16th April 2019 09:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சேலம் அரசு கலைக் கல்லூரியில் விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை துவங்கியது.
  சேலம் வின்சென்ட் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை பிரிவில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வரலாறு, பொது நிர்வாகவியல், அரசியல் அறிவியல், பி.எஸ்சி. கணிதம், புள்ளியியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவியமைப்பியல், கணினி அறிவியல், பி.காம். கூட்டுறவு, வணிகவியல் என 19 பாடப் பிரிவுகள் உள்ளன. இளங்கலை பிரிவில் 19 பாடப் பிரிவுகளில் சுமார் 4,530 மாணவர்கள் சேர்க்கப்படுவர். முதுகலை பிரிவில் சுமார் 900 இடங்கள் உள்ளன. மொத்தம் இளங்கலை, முதுகலை பிரிவில் 5,600 இடங்கள் முதலாண்டில் நிரப்பப்பட உள்ளன.
  நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அரசு கலைக் கல்லூரியில் விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை துவங்கியது.
  பொதுப் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 50 வசூலிக்கப்படுகிறது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு முதல் விண்ணப்பம் இலவசமாகவும், இரண்டாவது விண்ணப்பத்துக்குக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
  தற்போது இளங்கலை, முதுகலை ஆகிய பாடப் பிரிவுகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு சுமார் 13,000 விண்ணப்பங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விண்ணப்ப விநியோகத்தை முதல்வர் கலைச்செல்வன் துவக்கி வைத்தார். தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் முத்துசாமி உள்ளிட்டோர்
  உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai