சுடச்சுட

  

  ஆத்தூரில் தேமுதிக வேட்பாளர் எல்.கே. சுதீஷை ஆதரித்து விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் திங்கள்கிழமை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

  அப்போது அவர் பேசியதாவது:
  திமுக கூட்டணியினர் பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமலேயே வாக்குக் கேட்கின்றனர். நமக்கு முக்கிய ஆதாரமாக குடிநீர் பிரச்னை, விவசாயிகளுக்கு நீராதாரம் தேவை. வேட்பாளர் சுதீஷுக்கு  வாக்களித்தால் கண்டிப்பாக நதிநீர் இணைப்பைக் கொண்டு வரவும்,  அத்தியாவசிய வேலைகளையும் செய்து தரவும் நடவடிக்கை எடுப்பார் என்றார். அவருடன் தேமுதிக மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.இளங்கோவன், முன்னாள் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் சுபாரவி, அதிமுக நகரச் செயலாளர் அ.மோகன், ஆத்தூர் வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவர் இரா. தென்னரசு, நகர ஜெயலலிதா பேரவைச் செயலாளர் ஜி. முரளிசாமி, இல. வெங்கடேசன்,விஜயபாஸ்கர், செந்தில், செல்வமணி, நகரச் செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் திரளாகக் கலந்து கொண்டனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai