சுடச்சுட

  

  ஆத்தூர் அரசு கலைக் கல்லூரியில் ஏப். 22 முதல் விண்ணப்பங்கள் விநியோகம்

  By DIN  |   Published on : 17th April 2019 02:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை பாட வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரும் 22-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படவுள்ளது.
  இதுகுறித்து கல்லூரி முதல்வர் முனைவர் சூ. அருள்அந்தோணி  வெளியிட்ட செய்திக் குறிப்பு:
  ஆத்தூரை அடுத்துள்ள காட்டுக்கோட்டை வடசென்னிமலையில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. 
  இக் கல்லூரியில் இளங்கலை பாடவகுப்பில் முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் மே 6-ஆம் தேதி வரை கல்லூரி வேலை நாள்களில்  காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை விற்பனை செய்யப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மே 6 -ஆம் தேதி மாலை 5 மணி வரை பெறப்படும் என அதில் தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai