சுடச்சுட

    

    குடிநீர்த் தட்டுப்பாடு: வாழப்பாடி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

    By DIN  |   Published on : 17th April 2019 02:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    வாழப்பாடி பேரூராட்சி புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள், சீரான குடிநீர் விநியோகிக்கக் கோரி, வாழப்பாடி பேரூராட்சி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
    புதுப்பாளையம் கிராமத்துக்குக் கடந்த ஒரு மாதமாக சீரான குடிநீர் விநியோகிக்கவில்லை.
    இதனால், அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். எனவே குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணவும், தட்டுப்பாடின்றி வாரத்துக்கு ஒருமுறை சீரான குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கக்கோரியும், காலி குடங்களுடன் 50-க்கும் மேற்பட்ட பெண்கள், திங்கள்கிழமை வாழப்பாடி பேரூராட்சி அலுவலகத்துக்குத் திரண்டு சென்று முற்றுகையிட்டனர்.
    இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி காவல் ஆய்வாளர் சுப்ரமணியன் தலைமையிலான வாழப்பாடி போலீஸார் பேரூராட்சி அலுவலகத்துக்குச் சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீஸாரும், பேரூராட்சி நிர்வாகத்தினரும் புதுப்பாளையம் கிராமத்துக்கு சீரான குடிநீர் விநியோகிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்துப் போராட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai