சுடச்சுட

  

  கெங்கவல்லியில் வாக்குச் சாவடிகளுக்குரிய பொருள்கள் தயார்: பார்வையாளர் ஆய்வு

  By DIN  |   Published on : 17th April 2019 02:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட  கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 263 வாக்குச் சாவடிகளுக்குரிய பொருள்கள் தயார் நிலையில் உள்ளன.
  வாக்குச் சாவடிகளுக்குத் தேவையான எழுதுபொருள்கள், படிவங்கள், வாக்குப் பதிவு  இயந்திரங்கள், விவிபேட் இயந்திரம், வாக்குப் பதிவு இயந்திரங்கள் மறைவாக வைப்பதற்கான அட்டை, குண்டூசி, பசை, வேட்பாளர்கள் பெயர் விவர சுவரொட்டிகள், வாக்குப் பதிவு மையத்தின் விவர சுவரொட்டி, மாதிரி வாக்குப்பதிவு நடத்தியதற்கான 50 வாக்குகள்அடங்கிய சிலிப்களை வைப்பதற்கான பிளாஸ்டிக் பெட்டி, 29 வகையான பெரிய கவர்கள், மெட்டல் சீல், அழியாத மை பாட்டில், அது வைப்பதற்கான குவளை, ஏரோ மார்க் ரப்பர் சீல், ஸ்டாம்ப் பேடு, வாக்குச் சாவடி தலைமை அலுவலர் கையேடு, வாக்குப் பதிவு இயந்திர கையேடு, வாக்காளர் பட்டியல் குறியீடு நகல், வாக்காளர்கள் பதிவேடு (17 ஏ), வாக்காளர் சீட்டுகள், ஆய்வுக்குரிய வாக்குச் சீட்டுகள், பார்வையாளர் பதிவேடு, தேர்தல் பார்வையாளர் அறிக்கை, படிவம் 17 சி, முகவரி அட்டைகள், ஓட்டு பச்சை தாள், பேப்பர் சீல்,  அரக்கு, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி,டிவைன் நூல், போன்ற அனைத்து வகையான பொருள்களையும் ஒவ்வொரு சாக்குகளிலும் நிரப்பி, அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு அனுப்ப தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
  இப் பணியை  கள்ளக்குறிச்சி எம்பி தொகுதி பார்வையாளர் ஷெர்பா, கெங்கவல்லியில் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தார். அவருடன் கெங்கவல்லி வட்டாட்சியர் சுந்தரராஜன்  உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai