சுடச்சுட

  


  நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட சங்ககிரி நகரில் துணை ராணுவப் படையினர் செவ்வாய்க்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினர்.
  நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட சங்ககிரிப் பேரவைத் தொகுதியில் உள்ள 311 வாக்குச் சாவடிகளில் 10 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. இத் தொகுதியில் அமைதியான வாக்குப் பதிவு நடைபெற சங்ககிரி துணைக் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார்,  துணை காமெண்டர் போலாநாத் ஆகியோர் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
  சங்ககிரி புதிய பேருந்து நிலையம் அருகே துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ வீரர்கள், போலீஸார் கொடி அணி வகுப்பு தொடங்கி பழைய பேருந்து நிலையம், டி.பி. சாலை, சேலம் பிரதான சாலை வழியாகச் சென்று சங்ககிரி காவல் நிலையத்தை அடைந்தது. இதில், 50 துணை ராவணு படை வீரர்கள், 75 சிறப்பு ஆயுதப்படை காவலர்கள் உள்ளிட்ட 125 பேர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai