மேட்டூர் அணை நீர்வரத்து 28 கன அடியாகச் சரிவு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 28 கன அடியாகச் சரிந்தது.


மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 28 கன அடியாகச் சரிந்தது.
     மேட்டூர் அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்த காரணத்தால்,  மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு செவ்வாய்க்கிழமை காலை நொடிக்கு 98 கன அடியாக அதிகரித்தது.  மீண்டும் மழை பெய்யாத காரணத்தால்,  புதன்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 28 கன அடியாகச் சரிந்தது.  புதன்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53.83 அடியாக இருந்தது.  
      அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.  அணையின் நீர் இருப்பு 20.30 டி.எம்.சி.யாக இருந்தது.  அணைக்கு வரும் நீரின் அளவைவிட,  குடிநீருக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால்,  மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com