முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
காவிரியில் மூழ்கி இளைஞர் பலி
By DIN | Published On : 04th August 2019 04:57 AM | Last Updated : 04th August 2019 04:57 AM | அ+அ அ- |

மேச்சேரி அருகே கூணான்டியூர் காவிரியில் நீராடிய இளைஞர் சேற்றில் சிக்கி உயிரிழந்தார்.
சேலம் அரியானூரைச் சேர்ந்தவர் குமார் (24). அம்மாபேட்டையைச் சேர்ந்தவர் நவீன்குமார் (25), ஆழகாபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(23). இவர்கள் மூவரும் நண்பர்கள். ஆடிப்பெருக்கில் நீராட மூவரும், மேச்சேரி அருகே கூணான்டியூர் காவிரி கரைக்கு வந்தனர்.
அங்கு காவிரியில் நீராடியபோது குமார் ஆழமான பகுதிக்குச் சென்றார்.
அங்கு சேற்றில் சிக்கிக் கொண்டார். கரையில் இருந்த மற்றவர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
சேற்றில் சிக்கிய அவர் சிறிதுநேரத்தில் உயிரிழந்தார். மேச்சேரி போலீஸார் மீனவர்கள் உதவியுடன் சடலத்தை மீட்டு வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.