முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
சேலம் உருக்காலை குழுக்களுக்கு விருதுகள்
By DIN | Published On : 04th August 2019 04:55 AM | Last Updated : 04th August 2019 04:55 AM | அ+அ அ- |

சேலம் உருக்காலையைச் சேர்ந்த குழுக்கள் இரண்டு தேசிய விருதுகள் பெற்று சிறப்பு சேர்த்துள்ளன.
நல்ல ஆலோசனைகளை வழங்குதல், உற்பத்தி திறன் மேம்படுத்துதல், தர முன்னேற்றம், பாதுகாப்பு முன்னேற்றம் உள்ளிட்டவைகளுக்காக பணியாளர்களுக்கு விஸ்வகர்மா ராஷ்ட்ரிய புரஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையில், 2017-ஆம் ஆண்டுக்கான 28 விருதுகளில் சேலம் உருக்காலையைச் சேர்ந்த ஆர். செங்கோடன், எஸ். பழனிசாமி, எல். சசிகுமார், டி. ரங்கநாதன் மற்றும் கே. அரவிந்த், பி. சோமசுந்தரம், எம். செங்குட்டுவன், எம்.நடராஜன் மற்றும் எஸ். பங்காரு அடங்கிய இரண்டு குழுவினர் இரண்டு விருதுகளை வென்று சிறப்பு சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற பணியாளர்களை உருக்காலை நிர்வாக இயக்குநர் சஞ்சீவ் தனேஜா, உயர் அதிகாரிகள் பாராட்டினர்.