முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
பூலாம்பட்டி பகுதியில் விசைப்படகு போக்குவரத்து நிறுத்தம்
By DIN | Published On : 04th August 2019 05:03 AM | Last Updated : 04th August 2019 05:03 AM | அ+அ அ- |

எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி கதவணை நீர்த்தேக்கப் பகுதியில் விசைப்படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து 2,000 கன அடி நீர் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இந்த நீர் சனிக்கிழமை பூலாம்பட்டி நீர்த் தேக்கப்பகுதி வழியாகச் சென்றது. சேலம் , ஈரோடு மாவட்டங்களை இணைக்கும் வகையில் பூலாம்பட்டி- நெருஞ்சிப்பேட்டை இடையே படகு போக்குவரத்து நடைபெற்று வரும் நிலையில் சனிக்கிழமை விசைப்படகு போக்குவரத்து பாதுகாப்புக் கருதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
மறு உத்தரவு வரும் வரை கதவணைப் பகுதியில் எந்த வகையான படகுப் போக்குவரத்தும் நடைபெறாது எனவும், கூடுதலான அளவு தண்ணீர் திறப்பதால், பூலாம்பட்டி கதவணையில், ஆற்றின் நீர் வேகம் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் ஆற்றினை கடக்க முயற்சிக்க வேண்டாம் எனவும் அறிவுறத்தப்பட்டுள்ளனர். மேலும் அணைப் பகுதியில் புனித நீராட வரும் பக்தர்களை எச்சரிக்கை செய்யும் விதமாக, காவல் துறையினர் ஆங்காங்கே அறிவுப்புப் பலகைகளை வைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.