Enable Javscript for better performance
எருதாட்டத்தில் காளை முட்டி ஒருவர் பலி- Dinamani

சுடச்சுட

    

    இளம்பிள்ளை அருகே காடையாம்பட்டி குண்டு ராமன் காடு பகுதியில் ஓம்சக்தி கோயில் உள்ளது.
    இந்தக் கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் ஆடி 18 அன்று பொங்கல் விழாவும், அடுத்த நாள் எருதாட்டம் விழாவும் நடைபெறும். 
    இந் நிலையில் வழக்கம்போல் 4-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் 20-க்கும் மேற்பட்ட காளைகளைக் கொண்டு கோயில் முன் எருதாட்டம் துவங்கியது. அங்கு ஒரு காளை  பார்வையாளர்கள் மீது சீறிப் பாய்ந்து தூக்கிப் போட்டது. அதில் கே.கே. நகர் ஆசாரி தெருவைச் சேர்ந்த பழனியப்பன் மகன் சண்முகம் (47)  என்பவர் படுகாயமடைந்தார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மகுடஞ்சாவடி காவல் நிலைய போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். எருதாட்டம் நடந்த இடத்தில் சரியான பாதுகாப்பு வேலி அமைக்காததால் இந்த உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது என பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai